MrJazsohanisharma

Chillena Oru Mazhai Thuli



Chillena Song

Lyrics

லே லே லே ஹோ நானா நன் நானே
லே லே லே ஹோ நானா நன் நானே

சில்லென ஒரு மழை துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே ஹோ நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளாய் ஹோ நான் மாறினேன் பெண்ணே ஓ ஓ ஓ ஓ

அட கருப்பட்டியே என் சீனி கெழங்கே
சிரிச்சி கவுத்தாத
என் கண்ணு குட்டியே கம்மாக் கரையில் நீ
கப்பல் ஒட்டாதே
கண்ணால பாக்காம கண்ணாலம் பண்ணலாமா
கைகோர்த்து போலாமா

கொஞ்சம் பார்த்துவிடு கொஞ்சம் பேசிவிடு
என்று என் விழிகள் அய்யய்யோ என்னை திட்ட
கோடை கால மழை வந்து போன பின்னும்
சாலை ஓர மரம் தன்னாலே நீர் சொட்ட
என்னை தாக்கும் புயலே
இரவோடு காயும் வெயிலே

ஹோ ஹே உன்னாலே உன்னாலே
நூலில்லா காத்தாடி ஆனேனே
அடி பெண்ணே அடி கண்ணே
நான் விழுந்தால்
உன் பாதம் சேர்வேனே

உன் விழிகளிலே ஹோ நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளாய் நான் மாறினேன் பெண்ணே

சில்லென ஒரு மழை துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே ஹே

காதல் வந்தவுடன் காய்ச்சல் வந்ததடி
மீண்டு நான் பிழைக்க முத்தங்கள் தருவாயா
கோபங்கொள்கையிலும் கிறங்க வைக்குதடி
மீண்டும் ஒருமுறை நீ கோபத்தில் பார்ப்பாயா
ஆளை கொள்ளும் அழகே நிழல் கூட அழகின் நகலே

ஒரு நாளும் குறையாத
புது போதை கண்ணோரம் தந்தாயே
அணைத்தாலும் அணையாத ஒரு தீயாய்
நெஞ்சோரம் வந்தாயே
அடி இடம் வலமாய்
நான் ஆடினேன் பெண்ணே
ஒரு இடி மழையாய் எனைத் தாக்கினாய் முன்னே

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ



Post a Comment

Previous Post Next Post